ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்பு: ஜம்முவில் பதற்றம்
ஜம்மு - காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஜம்மு - காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்முவில் தொடர்ந்து தீவிரவாதிகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டு வரும் சூழலில், சித்ரா என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 6 பேரின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக ஜம்மு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவர்கள் உயிரிழந்ததற்கான காரணம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு - காஷ்மீரின் சோட்டிபோரா மாவட்டத்தில், தீவிரவாதிகளின் தாக்குதலில் காஷ்மீரி பண்டித் கொல்லப்பட்டார். அவரது சகோதரர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...