துபையில் ஆன்லைன் லாட்டரி குலுக்கலில் கேரள தொழிலாளி ஷானவாஸ் முதல் பரிசான ரூ.10 கோடியை வென்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வரும் கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி ஷானவாஸ். இவர் அடிக்கடி ஆன்லைன் லாட்டரி டிக்கெட் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு முதல் பரிசான 50 லட்சம் திர்ஹாம் கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.10 கோடி. இவரை வெற்றியாளராக 7,9,17,19,21 என்ற எண் தொடர் அவரை வெற்றியாளராக மாற்றியுள்ளது.
இதையும் படிக்கலாம் | இதுபோன்ற மோசமான அரசியலுக்கு வெட்கமாக இல்லையா பிரதமரே? - ராகுல் காந்தி கேள்வி
இதுகுறித்து ஷானவாஸ் கூறியதாவது: வளைகுடா நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறேன். 18 மாதங்களுக்கு மேலாக ஆன்லைன் லாட்டரி டிக்கெட் வாங்கி வருகிறேன். இப்போது தான் பரிசு விழுந்துள்ளது. இந்த பரிசுத் தொகையைக் கொண்டு எனது கடன்களை எல்லாம் அடைப்பேன். மீதமுள்ள பணத்தைக் கொண்டு துபையில் தொழில் தொங்குவதற்கு பயன்படுத்த உள்ளதாக ஷானவாஸ் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?
முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு!

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



