/

கேரளம்: மகள் இறந்த அதே இடத்தில் தந்தையும் விபத்தில் பலி

கேரளத்தில் மகள் இறந்த அதே இடத்தில் தந்தையும் விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 1:31 pm

DIN

கேரளத்தில் மகள் இறந்த அதே இடத்தில் தந்தையும் விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம், காரிடாஸ் பகுதியில் லாட்ஜ் வைத்திருப்பவர் ஜோசப்(77). இவர் நேற்று முன்தினம் தனது லாட்ஜுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். தெள்ளாகோம் அருகே வந்துகொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற அரசுப் பேருந்து ஜோசப்பின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. 

இந்த சம்பவத்தில் அவர் பலியானார். முன்னதாக இதே பகுதியில் கடந்த 1985ஆம் ஆண்டு நிகழ்ந்த கார் விபத்தில் ஜோசப்பின் 5 வயது மகள் இறந்தார். தற்போது மகள் இறந்த அதே இடத்தில் 37 ஆண்டுகளுக்குப் பின் தந்தையும் விபத்தில் பலியாகியிருப்பது கேரளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மறைந்த ஜோசப்பிற்கு மனைவி திரேசியம்மா, மகன் ஜெய்சன் மற்றும் மகள் ஜெயா உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.