அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

இந்திய சமூக கட்டமைப்பை உடைக்கிறது பாஜக: ஓவைசி விமர்சனம்

நபிகள் நாயகத்தையும் இஸ்லாமியர்களையும் பாஜக வெறுப்பதாக மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி  அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:08 am

DIN

நபிகள் நாயகத்தையும் இஸ்லாமியர்களையும் பாஜக வெறுப்பதாக மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி  அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். 

மேலும், இஸ்லாமியர்களுடன் நேரடி அரசியலில் மோதாமல், இழிவான அரசியலில் பாஜக ஈடுபடுவதாகவும் விமர்சித்தார். 

தெலங்கானாவில் கோஷாமால் தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ராஜா சிங், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களைப் பேசியதாக விடியோ ஒன்றை பதிவிட்டார். 

இந்த விடியோவில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நூபுர் சர்மாவின் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டதாகக் கூறி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ராஜா சிங்கை தெலங்கானா காவல் துறையினர் கைது செய்தனர். 

இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங் சர்ச்சைக் கருத்து குறித்து பேசிய ஹைதராபாத் எம்.பி. ஓவைசி, நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய ராஜா சிங் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

முகமது நபியையும் இஸ்லாமியர்களையும் பாஜக வெறுக்கிறது. அவர்கள் இந்தியாவின் சமூக, இறையான்மையை கட்டமைப்பை உடைப்பதையே இலக்காக கொண்டுள்ளனர். எங்களுடன் நேரடியாக அரசியலில் மோதுங்கள். அதைவிட்டு கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடாதீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.