‘எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் பாஜக அச்சம்’: தேஜஸ்வி யாதவ்

எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் பாஜக அச்சமடைந்துள்ளாதாக பிகார் மாநில துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
‘எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் பாஜக அச்சம்’: தேஜஸ்வி யாதவ்

எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் பாஜக அச்சமடைந்துள்ளாதாக பிகார் மாநில துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

பிகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், “நாங்கள் கிரிக்கெட் வீரர்கள். இந்தக் கூட்டணிக்கு முடிவே கிடையாது. இது நீண்ட இன்னிங்க்ஸில் தொடரப் போகிறது. இந்தக் கூட்டணி பிகார் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்காக சேர்ந்துள்ளது. யாராலும் இதைப் பிரிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், “எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலிமையடைந்து வருவதால் 2024 தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து பாஜக அச்சமடைந்துள்ளது. பிகாரில் பாஜக ஆட்சியை இழந்தபிறகு அவர்களின் உறவினர்களான அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையினரை ஏவி விடுகின்றனர். நான் வெளிநாடுகளுக்கு சென்றால் நோட்டீஸ் வழங்கும் மத்திய அரசு, நீரவ் மோடி போன்ற மோசடியாளர்கள் வெளிநாடு சென்றால் எதுவும் செய்வதில்லை” எனக் குறிப்பிட்டார். 

பிகாரில் பாஜக கூட்டணியிலிருந்த நிதீஷ்குமார் அதிலிருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி ஏற்படுத்தி ஆட்சியமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com