வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஒடிசாவில் மின்சாரம் தாக்கி 2 பெண் யானைகள் பலி

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு பெண் யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 9:14 am

DIN

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு பெண் யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

கியோஞ்சர் சதார் வரம்பில் உள்ள ஜூடியாவில் உள்ள க்ரிஷி விக்யான் கேந்திரா வளாகத்தில் மின் கம்பியில் சிக்கி யானைகள் இறந்துள்ளது.

பசுமை நிறைந்த வளாகத்திற்கு யானைகள் அடிக்கடி வந்து செல்வதுண்டு. புதன்கிழமை இரவு, யானைகள் கூட்டம் ஒன்று வளாகத்தில் இருந்ததாகவும், தாழ்வான மின் கம்பிகள் அறுந்து கிடந்ததால், மின்சாரம் தாக்கி 2 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. 

மின் கம்பி அறுந்து கிடப்பது குறித்து மின் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கிருஷி விக்யான் கேந்திரா அதிகாரிகள் தெரிவித்தன. 

விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒடிசாவில் 2019-20 மற்றும் 2021-22க்கு இடையில் வெவ்வேறு காரணங்களால் 245 யானைகள் இறந்துள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.