ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

டி.ஆர்.டி.ஓ.வின் புதிய தலைவராக சமீர் வி.காமத் பொறுப்பேற்பு

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டி.ஆர்.டி.ஓ.) தலைவராக சமீர் வி.காமத் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

News image
சமீர் வி.காமத்
Updated On :26 ஆகஸ்ட் 2022, 11:28 am

DIN

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டி.ஆர்.டி.ஓ.) தலைவராக சமீர் வி.காமத் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் (டி.ஆர்.டி.ஓ.) தலைவராகவும் சதீஷ் ரெட்டி பதவி வகித்து வந்தார்.

அவரை மத்திய அரசு  பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிவியல் ஆலோசகராக நியமித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின்  செயலாளராகவும் டி.ஆர்.டி.ஓ.வின்  தலைவராகவும் சமீர் வி.காமத் நேற்று வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று டி.ஆர்.டி.ஓ.வின் தலைவராக சமீர் வி.காமத் பொறுப்பேற்றுக்கொண்டார்.

விஞ்ஞானியான காமத் 1985-ம் ஆண்டு ஐஐடி காரக்பூரில் உலோகவியல் பொறியியல் படிப்பில் பி.டெக் படித்துள்ளார். பின், அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்றவர் 1989-ல் டி.ஆர்.டி.வில் விஞ்ஞானியாக இணைந்தார்.

அதன் பின், அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறியவர் 2017 ஆம் ஆண்டு நேவல் சிஸ்டம்ஸ் மற்றும் மெட்டீரியல்ஸ் இயக்குநராக பொறுப்பேற்றார். தற்போது, டி.ஆர்.டி.ஓ.வின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.