டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் அல்ல என்று மத்திய அரசு நம்புவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. இலவசமாக இருந்தால் தான் அதிக மக்கள் பயன்படுத்த முன்வருவார்கள்.
எனவே, கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் அல்ல. திறந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சிறந்த அணுகலை செயல்படுத்தக்கூடிய தளங்களை ஊக்கப்படுத்தி வருகிறோம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பஞ்சாப்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை
பணப்பரிவர்த்தனை முறைகளை ஒழுங்குபடுத்துவது, அதிலிருக்கும் குறைபாடுகளைப் போக்குவது, பணப்பரிவர்த்தனை முறையில் வருவாயைப் பெருக்குவது உள்ளிட்ட விஷயங்களிலும் ஆர்பிஐ கவனம் செலுத்தி வருகிறது.