கடந்த 6 ஆண்டுகளில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீது 56 வழக்குகள்! ஆந்திரம் முதலிடம்... தமிழகம்?

கடந்த 6 ஆண்டுகளில் எம்.பி., எம்எல்ஏக்களின் மீது 56 வழக்குகள் சிபிஐ பதிந்துள்ளதாக மக்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கடந்த 6 ஆண்டுகளில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீது 56 வழக்குகள்! ஆந்திரம் முதலிடம்... தமிழகம்?

கடந்த 6 ஆண்டுகளில் எம்.பி., எம்எல்ஏக்களின் மீது 56 வழக்குகள் சிபிஐ பதிந்துள்ளதாக மக்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், வருகிற டிசம்பர் 29 வரை 17 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இதில், 16 மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 

மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் இன்று அவை நடவடிக்கைகள் தொடங்கின. 

இந்நிலையில், கடந்த 2017 முதல் 2022 வரை 6 ஆண்டுகளில் (நடப்பாண்டு அக்டோபர் 31 வரை) நாட்டில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீது 56 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளதாகவும் அவற்றில் 22 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை இன்று மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக ஆந்திரத்தில் 10 எம்.பி./எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குகள் உள்ளன. கேரளம், உத்தர பிரதேசத்தில் தலா 6 பேர் மீதும் தமிழகத்தில் 4 பேர் மீதும் வழக்குகள் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com