ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும் 29 இடங்களில் முன்னிலை வகிப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
68 இடங்களைக் கொண்ட ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பா் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று(டிச. 8) காலை முதல் நடைபெற்று வருகின்றது.
தொடக்கத்தில் பாஜக முன்னிலை வகித்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
பெரும்பான்மைக்கு 35 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றி பெற்று மேலும் 29 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
பாஜக 9 இடங்களில் வெற்றி பெற்று 17 இடங்களில் முன்னிலையிலும் பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலையிலும் உள்ளன. ஆம் ஆத்மி எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிமாசல பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இதையும் படிக்க | டிச. 12ல் குஜராத்தில் பாஜக அரசு பதவியேற்பு!