’அவர் பாகிஸ்தானின் பப்பு...’ பாஜக யாரை சொல்கிறார்கள் ?

பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோவினை பாஜகவினர் தாக்கிப் பேசியுள்ளனர்.
’அவர் பாகிஸ்தானின் பப்பு...’  பாஜக யாரை சொல்கிறார்கள் ?

பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோவினை பாஜகவினர் தாக்கிப் பேசியுள்ளனர்.

தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்து வருவதால் பாகிஸ்தான் உலக நாடுகளுக்கிடையே அதன் மீதான நம்பிக்கையை முழுவதுமாக இழந்துள்ளது எனவும் தாக்கிப் பேசியுள்ளனர்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு  நிதியுதவி செய்து வருவதை தாக்கிப் பேசினார். இதனையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் இரக்கமற்ற கொலையாளி என கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு பாஜக சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரின் கருத்து குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோவின் கருத்து இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததின் வலியின் வெளிப்பாடாகத் தெரிகிறது. 1971 ஆம் ஆண்டு நடைபெற்றப் போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்த வலியால் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார். அவர் இவ்வாறு பேசியுள்ளது பாகிஸ்தானுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் செயலாகும். அவரது தாத்தா இந்தியாவிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு கதறி அழுது இருப்பார். இருந்தும், தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அளித்து வருகிறது என்றார்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீனாகாசி லேகி கூறியதாவது: பாகிஸ்தானிடம் இருந்து இதைத் தவிர வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. இந்த மாதிரியான ஆட்கள் பலுச்சிஸ்தானின் மக்களை கொன்றுக் குவித்தார்கள். ஒரு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் நடந்து கொள்ளும் விதம் இதுதானா? இவரைப் போன்ற ஆட்கள் காஷ்மீர் மக்களை கொன்று குவித்தவர்கள். பஞ்சாப் மக்களை கொன்று குவித்தவர்கள். கராச்சி மக்களை கொன்று குவித்தவர்கள் என்றார்.
 

பாஜகவைச் சேர்ந்த வெளியுறவுத் துறையைச் சேர்ந்த விஜய் சௌதைவாலே குறியதாவது: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோவின் கருத்தினை பாகிஸ்தானில் உள்ளவர்களே பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர் பாகிஸ்தானின் பப்பு. அவர் பாகிஸ்தான் பப்புவாகவே இருப்பார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com