நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சீன எல்லைப் பிரச்னையை கையில் எடுக்கும் காங்கிரஸ்! மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

இந்திய - சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 4-வது நாளாக மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளது.  

News image

கோப்புப்படம்

Updated On :16 டிசம்பர் 2022, 4:59 am

DIN

இந்திய - சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 4-வது நாளாக மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளது.  

கடந்த வெள்ளிக்கிழமை தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இந்திய படையினருடன் சீனப் படையினா் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகவும், எல்லையில் அமைதியை ஏற்படுத்த இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா் என்றும் இந்திய ராணுவம் திங்கள்கிழமை தெரிவித்திருந்தது.

மேலும், அருணாசலப் பிரதேசம் அருகே சீனப் படைகள் வான்வெளியாகவும் அத்துமீற முயன்றதாகவும், இந்திய விமானப் படை தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் எல்லையில் இந்திய - சீனப் படை மோதல் குறித்து விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தார். எனினும் எல்லை மோதல் குறித்து மேலும் சில விளக்கங்களைப் பெற காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அனுமதி கோரிய நிலையில் துணைத் தலைவர் கோரிக்கையை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து சீன எல்லைப் பிரச்னை குறித்து மேலும் விளக்கமளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து 4-வது நாளாக மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.