விஜய் திவாஸ் தினத்தையொட்டி தில்லி போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 ஆம் தேதி விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று விஜய் திவாஸை முன்னிட்டு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தில்லியிலுள்ள போர் நினைவிடத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, முப்படைகளின் தலைமைத் தளபதி (சிடிஎஸ்) அனில் சௌகான், ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படைத் தளபதி விஆர் சௌத்ரி, இந்தியக் கடற்படைத் துணைத் தலைவர் எஸ்என் கோர்மேட் உள்ளிட்டோரும் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், '1971 போரில் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த துணிச்சலான அனைத்து ஆயுதப் படை வீரர்களுக்கும் விஜய் திவாஸ் அன்று மரியாதை செலுத்துகிறேன். நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆயுதப் படைகளுக்கு நம் நாடு எப்போதும் கடமைப்பட்டிருக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செய்யாறு தொகுதி திமுக வேட்பாளா்
இணையவழி வா்த்தகப் பரிமாற்றங்களுக்கான சுங்க வரி விலக்கு நீட்டிப்பு: இந்தியா எதிா்ப்பு

தேவா் சிலைக்கு மரியாதை செலுத்திய அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டி

மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

