பிகாரில் கள்ளச்சாராய பலி எண்ணிக்கையை அரசு மறைக்கிறது: சுஷில் மோடி குற்றச்சாட்டு

பிகாரில் கள்ளச்சாராய பலி எண்ணிக்கையை அரசு மறைக்கிறது என்று சுஷில் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிகாரில் கள்ளச்சாராய பலி எண்ணிக்கையை அரசு மறைக்கிறது என்று சுஷில் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, "சப்ரா ஹூச் சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 100ஐ தாண்டிவிட்டது, ஆனால் அரசு எண்ணிக்கையை மறைக்கிறது. காவல்துறைக்கு பயந்து, மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இறுதிச் சடங்குகளை உடற்கூராய்வு செய்யாமல் செய்கின்றனர்,". இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனடையே சப்ரா ஹூச் சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினரை சுஷில் மோடி சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சாப்ரா பகுதியில் கடந்த திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதலில் 5 பேர் உயிரிழந்த நிலையில் படிப்படியாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 65 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக பிகாரில் கடந்த 2016ல் மது அருந்த, விற்பனை செய்ய நிதீஷ் குமார் அரசு தடை விதித்தது. இதன்பின்னர் கள்ளச்சாராயம் குடித்து பலியாவது அங்கு தொடர்கதையாக உள்ளது. எனினும் தற்போதைய சம்பவம் மிகவும் மோசமானதாக பார்க்கப்படுகிறது. பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பது தொடர்ந்து நடந்தாலும் தற்போது உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஆனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோருக்கு கண்டிப்பாக இழப்பீடு வழங்கப்படமாட்டாது என்றும் கள்ளச்சாராயம் குடித்தால் உயிரிழக்கதான் நேரிடும் என்றும் நிதீஷ் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com