திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அனைத்தையும் துறந்தவர்களுக்கானது காவி உடை! தீபிகா படுகோன் எதைத் துறந்தார்?: பாஜக

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பள் கபாடியா ஆகியோர் நடிப்பில் 'பதான்' திரைப்படம் உருவாகியுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2022, 10:46 am

DIN

காவி நிற உடை, அனைத்தையும் துறந்தவர்களுக்கானது என்றும், தீபிகா படுகோன் காவி உடை அணியும் அளவுக்கு எதைத் துறந்தார் எனவும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கேள்வி எழுப்பியுள்ளார். 

'பதான்' படத்தின் ''பேஷாரம் ராங்..'' எனும் பாடலில் ஷாருக்கானுடன் காவி உடை அணிந்தவாறு தீபிகா படுகோன் நடனமாடுவதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், பூபேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பூபேஷ் பாகல், வாழ்க்கையில் அனைத்தையும் துறந்தவர்கள் காவி உடை அணிவார்கள். ஆனால், உணவுக்காக ஆடும் குண்டர்கள் (தீபிகா படுகோன்) காவி உடை அணிந்துகொண்டு திரிகின்றனர். பொதுமக்களிடமிருந்து பணம் பறிப்பதைத் தவிர பொதுமக்களுக்காக அவர்கள் எதைத் தியாகம் செய்தனர் என கேள்வி எழுப்பியுள்ளார். 

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பள் கபாடியா ஆகியோர் நடிப்பில் 'பதான்' திரைப்படம் உருவாகியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள பேஷாரம் ராங்... எனும் பாடலில் காவி நிற உடை அணிந்தவாறு, ஷாருக்கானுடன் தீபிகா படுகோன் கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். 

இதற்கு பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. காவி நிற உடை அணிந்துகொண்டு வரும் பாடலின் காட்சிகளை படக்குழு நீக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் பாலிவுட் வட்டாரங்களில் பைகாட் பதான் எனும் ஹேஷ்டேக்குகள் இணையத்தில் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.