அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி!

ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :20 டிசம்பர் 2022, 4:33 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடந்த இந்த என்கவுன்டரில்,  கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.

காஷ்மீர் பகுதியில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் உள்ள முன்ஜ் மார்க் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இன்னும் என்கவுன்டர் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாதிகளிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி ஒன்றும், இரண்டு கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.