மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

‘ரப்பர் ஸ்டாம்ப் தலைவர்’: கார்கேவை விமர்சித்த மத்திய அமைச்சர்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, ரப்பர் ஸ்டாம்ப் தலைவர் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடுமையாக விமர்சித்துள்ளார்.

News image
பிரகலாத் ஜோஷி
Updated On :20 டிசம்பர் 2022, 7:00 am

DIN

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, ரப்பர் ஸ்டாம்ப் தலைவர் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தானில் நடைபெற்று வரும் ஒற்றுமைக்கான நடைப்பயணத்தின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா சுதந்திரம் பெற்றதில் பாஜகவுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த பிரச்னையை இன்று மாநிலங்களவையில் முன்வைத்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரகலாத் ஜோஷி பேசுகையில்,

ராஜஸ்தானில் மல்லிகார்ஜுன கார்கே பேசிய கருத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இன்று செயல்பட்டு வருவது இத்தாலி காங்கிரஸ். தற்போது இருப்பது ரப்பர் ஸ்டாம்ப் தலைவர்.

அவர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது. மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பொது அறிவு இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால், அது அவருக்கு இல்லை என்பது இன்று நிரூபணமாகியுள்ளது என விமர்சித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.