நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சீன எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ்!

சீன எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டுமென மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளது.  

News image

கோப்புப்படம்

Updated On :21 டிசம்பர் 2022, 3:28 am

DIN

சீன எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டுமென மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளது.  

அருணாச்சல பிரதேச எல்லையில் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இந்திய - சீனப்படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகவும், பின்னர் இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்தது. 

மேலும், அருணாசலப் பிரதேசம் அருகே சீனப் படைகள் வான்வெளியாகவும் அத்துமீற முயன்றதாகவும், இந்திய விமானப் படை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தபோதிலும்,சீன எல்லை விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி வலியுறுத்தி வருகிறது. 

இந்நிலையில் இன்றும்(புதன்கிழமை) சீன எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டுமென மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.