சீன எல்லை விவகாரம்: நாடாளுமன்ற வளாக மகாத்மா காந்தி சிலை அருகே எதிர்க்கட்சித் தலைவர்கள் போராட்டம்!

இந்தியா-சீனா இடையேயான எல்லை விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே போராட்டம்
சீன எல்லை விவகாரம்: நாடாளுமன்ற வளாக மகாத்மா காந்தி சிலை அருகே எதிர்க்கட்சித் தலைவர்கள் போராட்டம்!

புதுதில்லி: இந்தியா-சீனா இடையேயான எல்லை விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காந்தி சிலை முன் காலை 10:15 மணிக்கு நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஒத்த கருத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த போராட்டத்தில் சுமார் 12 கட்சிகள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 7- ஆம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இந்தியா-சீனா எல்லை விவகாரம் மற்றும் சமீபத்திய சீன அத்துமீறல்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இரு அவைகளிலும் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com