ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் கனிமொழி!
ஹரியாணாவில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் திமுக எம்.பி. கனிமொழி இன்று கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்.


ஹரியாணாவில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் திமுக எம்.பி. கனிமொழி இன்று (டிச.23) கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
அவருடன் கரூர் எம்.பி. ஜோதிமணியும் கலந்துகொண்டு காங்கிரஸ் தொண்டர்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் ஒற்றுமைப் பயணம் ஹரியாணாவில் 107வது நாளை எட்டியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைத் தொடர்ந்து ஹரியாணாவில் 2வது நாளாக நடைப்பயணம் நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்பு தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஒற்றுமை நடைப்பயணம் நடந்தது.
காங்கிரஸ் கட்சியின் நடைப்பயணத்தில் பல்வேறு அரசியல் கூட்டணி கட்சியினர் பங்கேற்று தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இன்று திமுக எம்.பி. கனிமொழி ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்துகொண்டார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள கனிமொழி, இன்று ஹரியாணாவில் நடைபெறும் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்டேன். இந்தியாவின் பன்மைத்துவத்தை உணர்ந்து அதனை ஒருங்கிணைக்கும் நோக்குடன் நடைபோடும் ராகுல் காந்தியுடன் இந்தப் பயணத்தில் நடந்ததில் மகிழ்ச்சி எனப் பதிவிட்டுள்ளார். மேலும் ராகுல் காந்தியுடனும், கரூர் எம்.பி.ஜோதிமணியோடும் ஒற்றுமைப் பயணத்தில் நடந்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...