கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் என யார் வேண்டுமானாலும் நடைப்பயணத்தில் பங்கேற்கலாம்: ஜெய்ராம் ரமேஷ்

நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் என யார் வேண்டுமானாலும் ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்கலாம் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :24 டிசம்பர் 2022, 4:14 am

DIN

நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் என யார் வேண்டுமானாலும் ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்கலாம் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் 108 ஆவது நாளாக ஹரியாணாவில் இருந்து இன்று தில்லிக்குள் நுழைந்தது.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ல் தொடங்கிய பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து இன்று தலைநகர் தில்லிக்குள் நுழைந்ததையடுத்து காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், 'ஒற்றுமை நடைப்பயணத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு என இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று யார் நினைக்கிறார்களோ அவர்கள் வெறுப்பைத் தவிர்த்து நடைப்பயணத்தில் பங்கேற்றால் வரவேற்போம்' என்று கூறியுள்ளார். 

முன்னதாக, பல முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கலந்துகொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.