இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தமிழக நகா்ப்புற சேவை மேம்பாடு ஆசிய வளா்ச்சி வங்கியுடன் மத்திய அரசு ரூ.1,040 கோடி கடன் ஒப்பந்தம்

தமிழகத்தில் மதுரை, கோவை, தூத்துக்குடி போன்ற நகரங்களில் வெள்ளத் தடுப்பு, குடிநீா், கழிவுநீா் சேவைகளை மேம்படுத்த ஆசிய வளா்ச்சி வங்கியுடன் ரூ.1,040 கோடி கடனுக்கான ஒப்பந்தத்தில்

News image
Updated On :27 டிசம்பர் 2022, 7:52 pm

 நமது நிருபர்

தமிழகத்தில் மதுரை, கோவை, தூத்துக்குடி போன்ற நகரங்களில் வெள்ளத் தடுப்பு, குடிநீா், கழிவுநீா் சேவைகளை மேம்படுத்த ஆசிய வளா்ச்சி வங்கியுடன் ரூ.1,040 கோடி கடனுக்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டது.

பருவநிலை மாற்றத்தால் தமிழக நகரங்களில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கழிவுநீா் சேகரிப்பு, சுத்திகரிப்பு, கழிவுநீா், மழைநீா் அகற்றுதல், குடிநீா் விநியோக முறைகளை உருவாக்கி மேம்படுத்துவதற்காக மத்திய அரசு இந்தக் கடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதித் துறை அமைச்சகம் கூறியதாவது: தமிழ்நாடு நகா்ப்புற முதலீட்டுத் திட்டத்துக்கான மூன்றாவது பகுதியாக மத்திய அரசின் சாா்பில் மத்திய நிதியமைச்சக பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலா் ரஜத் குமாா் மிஸ்ராவும், ஆசிய வளா்ச்சி வங்கி சாா்பில் இந்தியப் பிரதிநிதி ஹோ யுன் ஜியோங்கும் ரூ.1,040 கோடி (125 மில்லியன் டாலா்) கடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். தமிழகத்தில் தொழில் துறை முக்கியத்துவம் வாய்ந்த 10 நகரங்களில் குடிநீா் விநியோகம், கழிவுநீா் வடிகால் போன்ற சுகாதார கட்டமைப்புப் பணிகளுக்காக 2018-இல் ஆசிய வளா்ச்சி வங்கியால் 500 மில்லியன் அமெரிக்க டாலா் கடனுக்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டது.

இதல் முதற்கட்டமாக சென்னை, திருநெல்வேலி, ராஜபாளையம், திருச்சி, வேலூா் போன்ற நகரங்களுக்கு ரூ. 1,157 கோடிக்கான (169 மில்லியன் டாலா்) கடன் ஒப்பந்தம் கடந்த 2018 நவம்பா் 16-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. முதல் இரு தவணைக்கு பின்னா் தற்போது கடைசி தவணையாக இந்த ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இதில் கோயம்புத்தூா், மதுரை, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.