உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயை சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 100 வயதான ஹீராபென் மோடியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது தாயாரை சந்திப்பதற்காக ஆமதாபாத் திரும்பிய பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.