தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

துனிஷாவுடனான வாட்ஸ்ஆப் உரையாடலை நீக்கிய ஷீசன் கான்! காவல் துறை

தற்கொலை செய்துகொண்ட நடிகை துனிஷா உடனான வாட்ஸ்ஆப் உரையாடல்களை நடிகர் ஷீசன் கான் நீக்கியுள்ளதாக காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

News image
Updated On :29 டிசம்பர் 2022, 11:22 am

DIN

தற்கொலை செய்துகொண்ட நடிகை துனிஷா உடனான வாட்ஸ்ஆப் உரையாடல்களை நடிகர் ஷீசன் கான் நீக்கியுள்ளதாக காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

நடிகை துனிஷாவின் செல்போனை சைபர் பிரிவைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் அதில் நீக்கப்பட்ட தரவுகள் குறித்து விசரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

மறைந்த சீரியல் நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, அவருடைய முன்னாள் காதலனை புகாரின்பேரில் கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், ஷீசன் கான் ஒவ்வொரு முறையும் மாறி மாறி பதில் அளிப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சுமார் 7 மணி நேரம் ஷீசன் உடனான விசாரணையை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். 

அதில் முன்பு மதம் சார்ந்தும், வயது காரணமாகவும் துனிஷாவுடனான காதலை முறித்துக்கொண்டதாக ஷீசன் குறிப்பிட்டார். ஆனால் பிறகு, நடிப்புத் துறையில் முன்னேற வேண்டும் என்பதற்காக துனிஷா உடனான காதலிலிருந்து விலக முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் துனிஷா உடனான வாட்ஸ்ஆப் உரையாடல்கள் அனைத்தையும் ஷீசன் கான் நீக்கியதைக் கண்டறிந்துள்ளனர். மேலும், ஷீசன் கானுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால், அந்த பெண் யார் என்பது குறித்து கண்டறிந்து அவரிடம் விசாரணை நடத்த காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

துனிஷா தற்கொலை:

சண்டிகரைச் சேர்ந்த துனிஷா சர்மா, ஹிந்தி தொடர்களில் நடித்து வந்தார். ‘பாரத் கா வீா் புத்ரா’, ‘மஹாராணா பிரதாப்’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடா்களிலும் ‘ஃபிதூா்’, ‘பாா் பாா் தேக்கோ’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடிகை துனிஷா சா்மா நடித்துள்ளாா். 

அந்தவகையில் ‘அலி பாபா: தஸ்தான்-இ-காபூல்’ என்ற தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு மும்பையின் வசாய் பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்புக்கு மத்தியில் கழிவறையில் துனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

துனிஷாவின் தாயார், தந்து மகளின் மறைவுக்கு காதலனும் சக நடிகருமான ஷீசன் காரணம் என காவல் துறையில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் ஷீசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.