மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ராணுவ வீரர்கள், ஆண்டுக்கு 100 நாள்கள் தங்கள் குடும்பத்துடன் இருக்க அல்லது தலைமை அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :31 டிசம்பர் 2022, 12:27 pm


பெங்களூரு: நாட்டின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்கள், ஆண்டுக்கு 100 நாள்கள் தங்கள் குடும்பத்துடன் இருக்க அல்லது தலைமை அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற இந்தோ - திபெத் காவல்துறைக்கு நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டப் பணிகளை தொடக்கி வைத்தும், பல திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்துப் பேசிய அமித் ஷா இவ்வாறு கூறினார்.

எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு ஆண்டுதோறும் 100 நாள்கள் அவர்களது குடும்பத்துடன் தங்கியிருக்க அல்லது தலைமை அலுவலகத்தில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். இந்த பரிந்துரையை நிறைவேற்றுவது தொடர்பான பணிகள் தொடங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதன் மூலம் ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறையும். எல்லைப் பாதுகாப்புப் பணி என்பது மிகவும் சவாலானது. என்னால் அதனை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் அமித் ஷா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.