குஜராத்தில் பேருந்து மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகினர்.
குஜராத்தில் ஆமதாபாத் - மும்பை நெடுஞ்சாலையில் நவ்சரி எனும் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் பேருந்து மீது எஸ்யுவி கார் ஒன்று மோதியது.
இந்த விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், குஜராத் விபத்து செய்தி அதிர்ச்சியாக இருப்பதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறிய அவர், உள்ளூர் நிர்வாகம் தேவையான அனைத்து உதவிகளைச் செய்யவும் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | 'புதிய முடிவுகளை எடுக்க சரியான நேரம் இது' - சமந்தா ட்வீட்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கோவில்பட்டி பகுதியில் போலீஸாா் வாகன சோதனை
குட்கா பொருள்கள் விற்ற மளிகைக் கடைக்காரா் கைது

தேக்கமடைந்து நஷ்டத்தை தவிா்க்கும் வகையில் பல்லடத்தில் கறிவேப்பிலை பவுடா் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஜிப்மரில் 3 நாள் சா்வதேச மருத்துவ மாநாடு நிறைவு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

