பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 80 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ரூ.48,000 கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறியதாவது: 2022-23-ஆம் நிதியாண்டில் பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நகரங்களிலும் கிராமங்களிலும் தகுதியுடைய பயனாளிகளுக்கு 80 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். இதற்காக, மத்திய பட்ஜெட்டில் ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நடுத்தர குடும்பத்தினருக்கும் நகா்ப்புறத்தில் வாழும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவா்களுக்கும் வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு நிலம் தோ்வு செய்வது, கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றில் மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து பணியாற்றும்.
நில ஆவணங்களைப் பாதுகாப்பதில் தனித்துவ நில அடையாள எண் முறையைப் பின்பற்றுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்படும். நில ஆவணங்களை எந்த இடத்தில் இருந்து பதிவு செய்வதற்கு வசதியாக ‘ஒரே தேசம், ஒரே பதிவு திட்டம்’ அறிமுகம் செய்யப்படும் என்று அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராஜா ராணி போல் உருவாகும் ஆர்யா - 40!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மனைவியுடன் வந்து வாக்களிப்பு!
திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர அதிகாரிகள் நினைக்கிறார்கள்; அது நடக்காது!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


