/

’கிரிப்டோகரன்சி குறித்த விவாதம் தேவை இல்லை’: நிர்மலா சீதாராமன்

கிரிப்டோகரன்சி மற்றும் கிரிப்டோ சொத்துகள் குறித்த விவாதம் தற்போது தேவை இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 1:47 pm IST

கிரிப்டோகரன்சி மற்றும் கிரிப்டோ சொத்துகள் குறித்த விவாதம் தற்போது தேவை இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் கிரிப்டோகரன்சியை வணிகத்திற்கு 30% வரி விதிக்கப்படும் என்றும் ஒவ்வொரு கிரிப்டோ பரிவர்த்தனைக்கும் 1% வரிப் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

அது குறித்த நிர்மலா சீதாரானிடம் கேள்வி எழுப்பியபோது ’மத்திய ரிசர்வ் வங்கி ஒரு டிஜிட்டல் நாணயத்தை வெளியிடும், கிரிப்டோ மற்றும் கிரிப்டோ சொத்துக்கள் என்ன என்பது பற்றி இப்போது எந்த விவாதமும் தேவை இல்லை. சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது. டிஜிட்டல் சொத்துகள் குறித்த விவரம் ஆலோசனைக்கு பிறகு தெரியவரும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.