12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

300 கோடி மதிப்பிலான பிட்காயினுக்காக வியாபாரியை கடத்திய போலீஸ்...புனேவில் அதிர்ச்சி

பங்கு வணிகர் வினய் நாயக் 300 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயினை வைத்திருந்தது புனே சைபர் குற்றப்பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திலீப் துக்காராம் கந்தாரேவுக்கு தெரியவந்துள்ளது.

கோப்புப்படம்

Published On :

மகாராஷ்டிரத்தில் புனேவில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாடில் வணிகரிடம் இருந்த பிட்காயின் கிரிப்டோகரன்சியை மிரட்டி பறிப்பதற்காக காவலர் ஒருவரே அவரை கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. 

இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் ஆனந்த் பாய்ட் கூறுகையில், "பங்கு வணிகர் வினய் நாயக் 300 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயினை வைத்திருந்தது புனே சைபர் குற்றப்பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திலீப் துக்காராம் கந்தாரேவுக்கு தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, வினய் நாயக்கைக் கடத்தி பிட்காயின்களைப் பறிக்க மற்ற ரெளடிகளுடன் கந்தாரே சதித் திட்டம் தீட்டினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜனவரி 14 அன்று ஒரு ஹோட்டலில் இருந்து பாதிக்கப்பட்ட தாதவடேவை கடத்திச் சென்றனர். பாதிக்கப்பட்டவரின் நண்பர் புகார் அளிக்க முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

கைதாகிவிடுவோமோ என எண்ணி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவரை விடுவித்து அருகில் உள்ள பகுதியில் இறக்கிவிட்டனர். பிட்காயின்களுக்காக தான் கடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் போலீசாரிடம் தெரிவித்தார்" என்றார்.

இதையடுத்து, சுனில் ராம் ஷிண்டே, வசந்த் ஷியாம்ராவ் சவான், பிரான்சிஸ் திமோதி டிசோசா, மயூர் மகேந்திர ஷிர்கே, பிரதீப் காஷிநாத் கேட், திலீப் துக்காராம் கந்தாரே, நிகோ ராஜேஷ் பன்சால், ஷிரிஷ் சந்திரகாந்த் கோட், சதி திட்டத்தை தீட்டி கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட காவலர் கந்தாரே ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.