/

நீண்ட நாள்களுக்கு பின் மாநிலங்களவையில் இடையூறு இல்லை: வெங்கையா நாயுடு

நீண்ட நாள்களுக்கு பிறகு மாநிலங்களவை நேற்று இடையூறு இல்லாமல் நடைபெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
வெங்கையா நாயுடு
Updated On :3 பிப்ரவரி 2022, 5:13 am

DIN

நீண்ட நாள்களுக்கு பிறகு மாநிலங்களவை நேற்று இடையூறு இல்லாமல் நடைபெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் அமர்வு நடைபெற்றது.

இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் வெங்கையா நாயுடு கூறியதாவது:

நீண்ட நாள்களுக்கு பிறகு மாநிலங்களவை இடையூறு இல்லாமல் நடைபெற்றது. குடியரசுத் தலைவரின் உரை மீது நன்றி தெரிவிக்கும் தரமான விவாதத்தை கண்டு மகிழ்ச்சியடைந்தேன். மீதமுள்ள அமர்வுகள் இதுபோன்று நடைபெறும் என நம்புவதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.