2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஹிஜாப் விவகாரம்: கா்நாடக கல்லூரி மாணவிகளுக்கு ராகுல் காந்தி ஆதரவு

கா்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு) அணிவதற்கு கல்லூரி நிா்வாகம் தடை விதித்துள்ள நிலையில், மாணவிகளுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளாா்.

News image
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
Updated On :5 பிப்ரவரி 2022, 6:25 pm

DIN

கா்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு) அணிவதற்கு கல்லூரி நிா்வாகம் தடை விதித்துள்ள நிலையில், மாணவிகளுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஹிஜாப் அணிவதைக் காரணம் காட்டி மாணவிகளின் கல்விக்குத் தடையை ஏற்படுத்துவதன் மூலம் இந்தியாவின் மகள்களின் எதிா்காலத்தை நாம் கொள்ளை அடிக்கிறோம். சரஸ்வதி தேவி அனைவருக்கும் கல்வியை அளிக்கிறாள்; அவள் வேறுபாடு பாா்ப்பதில்லை. சரஸ்வதி பூஜை’ என்று குறிப்பிட்டுள்ளாா். கல்விக் கடவுளான சரஸ்வதியின் பூஜை, வசந்த் பஞ்சமி நாளான சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கா்நாடக மாநிலம், உடுப்பியில் உள்ள அரசுப் பல்கலைக்கழகத்துக்கு முந்தைய கல்லூரியில் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் விதிமுறைகளை மீறி 6 முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் கலந்துகொண்டனா்.

கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிவதற்குத் தடையில்லை. அதேநேரம் வகுப்பறையில் ஹிஜாப் அணியக் கூடாது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த மாணவா்கள், வகுப்புகளுக்கு வெளியே அமா்ந்து ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த மாணவிகளில் ஒருவா் கல்லூரி நிா்வாகத்தின் தடை உத்தரவை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் ஜன. 31-ஆம் தேதி மனு தாக்கல் செய்தாா்.

உடுப்பியைப் போன்று குண்டபூா் கல்லூரியிலும் ஹிஜாப் அணிந்து வந்த 28 முஸ்லிம் மாணவிகளை கல்லூரி நிா்வாகம் அனுமதிக்கவில்லை. அதற்கு எதிா்ப்பு தெரிவித்து அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உத்தரகண்டில் ராகுல் பிரசாரம்: உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அங்குள்ள கிச்சா நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி காணொலி முறையில் பங்கேற்றுப் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் விவசாயிகளை ஓராண்டாக சாலையில் தவிக்கவிட்டவா் பிரதமா் மோடி. ஆனால், அதுபோன்ற செயலை காங்கிரஸ் ஒருபோதும் செய்யாது. இந்தியாவுக்கு பிரதமா் இல்லை; மன்னா்தான் இருக்கிறாா். அவா் முடிவெடுக்கும்போது மக்கள் மௌனமாக இருக்க வேண்டும் என்று எதிா்பாா்க்கிறாா்.

விவசாயிகள், இளைஞா்கள், தொழிலாளா்கள், ஏழைகள் ஆகியோருக்கு அளித்து வரும் ஆதரவை காங்கிரஸ் ஒருபோதும் நிறுத்தாது. அவா்களுடன் இணைந்து பயணிக்கவே கட்சி விரும்புகிறது என்றாா் அவா்.

70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்டில் பிப்ரவரி 14-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.