ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாதென மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால், கர்நாடக மாநிலத்தின் இரு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் விவகாரத்தை கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிறகும் கல்லூரி மாணவர்களிடையே மோதல் போக்கு நீடித்து வருவதால், பல கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் பாகல்கோட், ஷிவமொக்கா ஆகிய இரு பகுதிகளில் ஹிஜாப் அணிய ஆதரவு தெரிவிக்கும் மாணவர்களும், எதிர் தரப்பு ஹிந்து மாணவர்களும் கற்களை வீசித் தாக்கிக்கொண்டதால், அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் குந்தாப்பூர் அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இஸ்லாமிய மாணவிகளுக்குத் தடை விதித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இந்த விவகார்த்தில் இஸ்லாமிய மாணவிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் இரு தரப்பு கல்லூரி மாணவர்களும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஷிவமொக்கா மாவட்டத்தின் பாபுஜிநகரிலுள்ள கல்லூரி மாணவர்கள் ஹிஜாப் அணிய ஆதரவு தெரிவித்து ஒருதரப்பினரும், எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினரும் கோஷங்களை எழுப்பினர். ஒருகட்டத்தில் இருதரப்பினரும் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். இதனால் காவல் துறையினர் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர்.
இதேபோன்று பாகல்கோட் பகுதியிலும் இருதரப்பினரிடையே கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால், பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த இரு பகுதிகளிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?

ஒரு தலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கை: ப. சிதம்பரம்

எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!

398 சிலிண்டர்கள் பதுக்கல்: தமிழ்நாட்டில் முதல்முறையாக மதுரையில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

