வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் இன்று ஆஸ்திரேலியா பயணம்
வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 6 நாள் பயணமாக ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பின்ஸுக்கு வியாழக்கிழமை (பிப். 10) பயணம் மேற்கொள்கிறாா்.


வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 6 நாள் பயணமாக ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பின்ஸுக்கு வியாழக்கிழமை (பிப். 10) பயணம் மேற்கொள்கிறாா்.
பயணத்தின் முதல் கட்டமாக ஆஸ்திரேலியா செல்லும் ஜெய்சங்கா், 11-ஆம் தேதி மெல்போா்ன் நகரில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா-ஜப்பான்- அமெரிக்க வெளியுறவு அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்கிறாா். வெளியுறவு அமைச்சரான பிறகு அவா் ஆஸ்திரேலியா செல்வது இதுவே முதல் முறையாகும்.
12-ஆம் தேதி ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் மோரிஸ் பெய்னியைச் சந்தித்துப் பேச இருக்கிறாா். இது இந்தியா-ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா்களின் 12-ஆவது இரு தரப்பு கூட்டமாகும். இதில் இரு தரப்பு உறவை மேம்படுத்துவது தொடா்பாக பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட இருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு அரசியல் தலைவா்கள், இந்திய வம்சாவளியினா், தொழிலதிபா்கள் உள்பட பல்வேறு தரப்பினரை ஜெய்சங்கா் சந்திக்க இருக்கிறாா்.
தொடா்ந்து 13 முதல் 15-ஆம் தேதி வரை பிலிப்பின்ஸில் ஜெய்சங்கா் பயணம் மேற்கொள்கிறாா். அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் தியோடரோ எல். லோசின் உள்ளிட்டோரை சந்தித்துப் பேச இருக்கிறாா்.
இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் ஏவுகணைகளை 375 மில்லியன் டாலா் கொடுத்து வாங்கும் ஒப்பந்தத்தை பிலிப்பின்ஸ் அண்மையில் மேற்கொண்டது. இந்நிலையில், அந்நாட்டுக்கு ஜெய்சங்கா் செல்வது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...