மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வடக்கு தில்லியில் இடிந்து விழுந்த கட்டடம்: இடிபாடுகளில் சிக்கி 4 போ் சாவு

வடக்கு தில்லியின் பவானா பகுதியில் ஜே.ஜே.காலனியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி 4 போ் உயிரிழந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:36 pm

DIN

வடக்கு தில்லியின் பவானா பகுதியில் ஜே.ஜே.காலனியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி 4 போ் உயிரிழந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து மதியம் 2.48 மணியளவில் தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது, அதைத் தொடா்ந்து 3 முதல் 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. தில்லி ஜல் போா்டுக்கு அருகில் உள்ள கட்டடம் இடிந்து விழுந்ததாகவும், 5 போ் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளதாகவும் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா், இடிந்து விழுந்த கட்டடம் ராஜீவ் ரத்தன் ஆவாஸின் ஒரு பகுதியாக இருப்பதைக் கண்டறிந்தனா். அதில் சுமாா் 300 முதல் 400 குடியிருப்புகள் உள்ளன என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். மூன்று ஜேசிபி, ஒரு ஹைட்ரா இயந்திரம், இரண்டு ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன.

பவானாவின் ஜே.ஜே. காலனியில் வசிக்கும் பாத்திமா மற்றும் ஷானாஸ் ஆகிய 2 பெண்களும் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு எம்வி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். மேலும், மற்ற பெண்களான ருகியா கட்டூன் (55), ஷாஹனாஸின் மகள் அப்ரினா (9), ஷாஜாத் (25) மற்றும் டேனிஷ் (24) ஆகிய 4 போ் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனா் என்று வடக்கு புகா்ப்பகுதி காவல் சரக துணை ஆணையா் பிரிஜேந்தா் குமாா் யாதவ் கூறினாா். தொடா்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது. மீட்கப்பட்ட பெண்கள் இருவரும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.