/

உ.பி.யில் ஜீப்-கார் மோதல்: 4 பேர் பலி

உத்தரப் பிரதேசம், சீதாபூர் மாவட்டத்தில் உள்ள மெஹ்மூதாபாத் பகுதியில் ஜீப்பும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:24 am

DIN

உத்தரப் பிரதேசம், சீதாபூர் மாவட்டத்தில் உள்ள மெஹ்மூதாபாத் பகுதியில் ஜீப்பும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 

விபத்தில் இறந்தவர்கள் சுர்ஜித் யாதவ் (24), அஜித் குமார் சிங் (35), கம்லா (13) மற்றும் சீமா சிங் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சிதாபூரில் உள்ள காவல் கண்காணிப்பாளர் ஆர்.பி. சிங், விசாரணையை மேற்பார்வையிட சம்பவ இடத்திற்குச் சென்றார்.

பெத்ரா மாதவ் கிராமத்தைச் சேர்ந்த சுர்ஜித் தனது ஜீப்பை மெஹ்மூதாபாத் நோக்கி ஓட்டிச் சென்றபோது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தன்னிபூர்வா கிராமத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இரண்டு வாகனங்களும் ஒன்றோடொன்று நேருக்குநேர் மோதியதால் உடல்களை வெளியே எடுக்க மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உடல்களை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.