புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-04 (ரிசாட்-1ஏ) செயற்கைக்கோளுடன் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டாக இன்று அதிகாலை 5.59 மணிக்கு சி-52 செலுத்தப்பட்டது.
இந்நிலையில், பூமியில் இருந்து 529 கிலோ மீட்டா் உயரத்தில் சூரிய வட்ட சுற்றுப்பாதையில் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் தாங்கிச் செல்லும் 1,710 கிலோ எடைகொண்ட இஒஎஸ்-04 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு
5 ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்ட இந்த செயற்கைக்கோள் புவிக் கண்காணிப்பு, வேளாண், வனம் சாா்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இது பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது.
இதனுடன் ஆய்வுத் திட்டத்தின்கீழ் மாணவா்களால் வடிவமைக்கப்பட்ட இன்ஸ்பயர் சாட்-1, ஐஎன்எஸ்- 2டிடி ஆகிய 2 சிறிய வகை செயற்கைக்கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
இஸ்ரோ தலைவராக சோமநாத் பொறுப்பேற்ற பிறகு செலுத்தப்படும் முதல் ராக்கெட் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிரதமர் வருகை: திருப்பரங்குன்றம் கோயிலில் சோதனைக்குப் பிறகே மக்கள் அனுமதி!

தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்வு

விஜய்-சங்கீதா விவகாரத்தை அரசியல்படுத்த விருப்பவில்லை: அண்ணாமலை

விருச்சிக ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

