புது தில்லி : நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,148 பேருக்கு தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,28,81,179 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,48,359 ஆகவும் குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,
நாட்டில் புதிதாக 14,148 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 302 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,12,924 -ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20 சதவிகிதமாக குறைந்துள்ளது.
நேற்று ஒரேநாளில் 30,009 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,22,19,896 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.46 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தற்போது 1,48,359 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினசரி தொற்று பாதிப்பு தொடர்ந்து 18 ஆவது நாளாக ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.35 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,76,52,31,385 கோடி கரோனா டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30,49,988 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | உக்ரைன் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார் புதின்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
நாளைய மின்தடை: சத்துவாச்சாரி
பொன்னேரி அருகே 500 போதை மாத்திரை, 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்
பைக்கை மறித்து தங்க செயின் பறிக்க முயற்சி: 2 போ் கைது
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



