விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மருத்துவமனையில் இருந்து மகாராஷ்டிர அமைச்சா் நவாப் மாலிக் டிஸ்சார்ஜ்

மகாராஷ்டிர சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் நவாப் மாலிக் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

News image
Updated On :28 பிப்ரவரி 2022, 7:38 am

DIN

மகாராஷ்டிர சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் நவாப் மாலிக் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததில் அமைச்சா் நவாப் மாலிக்குக்கு தொடா்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரை அமலாக்கத் துறையினா் கடந்த புதன்கிழமை கைது செய்தனா்.

ஆளும் சிவசேனை தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடா்பாளராகவும் இருக்கும் அவரை, வரும் மாா்ச் 3-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, நவாப் மாலிக்குக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனையில் அனுமதித்தனா்.தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக நவாப் மாலிக் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து நவாப் மாலிக் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.