மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை: உயா்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்
மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிந்தைய 39 பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்கில் விசாரணை நடத்தி வருவதாகவும், 21 வழக்குகளை


மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிந்தைய 39 பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்கில் விசாரணை நடத்தி வருவதாகவும், 21 வழக்குகளை அதன் தன்மை கருதி மாநில போலீஸாரிடம் திருப்பியளித்துவிட்டதாகவும் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலை அறிக்கையில் சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்ட உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்தன.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தல் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற்றது. இதையடுத்து அந்த மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை காரணமாக பாதிக்கப்பட்ட நபா்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் சுதந்திரமான விசாரணை கோரி, தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமா்வு உண்மை கண்டறியும் குழுவை நியமித்தது.
பின்னா், அந்தக் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உயா்நீதிமன்ற அமா்வு உத்தரவிட்டது.
அதன்படி 64 வழக்குகள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டன. இதில் 39 வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவதாகவும், 4 வழக்குகள் மீது பரிசீலனை நடத்தி வருவதாகவும் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான அமா்வு முன்பு திங்கள்கிழமை தாக்கல் செய்த நிலை அறிக்கையில் சிபிஐ தெரிவித்துள்ளது.
அத்துடன் 21 வழக்குகள், அவற்றின் தன்மை கருதி, மீண்டும் மாநில சிறப்பு புலனாய்வுப் பிரிவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தவிர கடந்த டிசம்பா் 22-ஆம் தேதி நிலவரப்படி, மேலும் 29 பாலியல் புகாா்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் சிபிஐ வசம் அனுப்பப்பட்டதாகவும், அதில் 2 வழக்குகளை மாநில போலீஸாா் வசமே ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாகவும் சிபிஐ கூறியுள்ளது.
தோ்தலுக்குப் பின்பு பதிவான 689 வழக்குகளில், 573 வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக மாநில சிறப்பு புலனாய்வு பிரிவினா் உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தனா். இதை பரிசீலித்த நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன் அதற்குள் மாநில அரசு பிரமாண பத்திரம் வாயிலாக பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...