தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பிகார்: துணை முதல்வர்கள், அமைச்சர்களுக்கு கரோனா

பிகார் மாநிலத்தின் துணை முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

துணை முதல்வர் ரேணு தேவி

Updated On :5 ஜனவரி 2022, 6:07 am

பிகார் மாநிலத்தின் துணை முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் தினசரி பாதிப்புகளும் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 2,000-யைக் கடந்திருக்கிற நிலையில் பிகார் மாநிலத்தின் துணை முதல்வர்களான ரேணு தேவி, தர்கிஷோர் பிரசாத் மற்றும் அமைச்சர்கள் சுனில் குமார், அசோக் சௌத்ரி, விஜய் சௌத்ரி ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநிலத்தில் நாளை(ஜன.6) முதல் ஜன.21 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

முன்னதாக, தில்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று(ஜன.4) கரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.