மகாராஷ்டிரத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 40,925 பேருக்கு பாதிப்பு
மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் மேலும் 40,925 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் மேலும் 40,925 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 40,925 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் மும்பையில் 20,971 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி 1.14 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவால் இன்று மேலும் 20 பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,41,614ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து 14,256 பேர் மீண்டனர்.
இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 65,47,410 ஆக உயர்ந்துள்ளது. வீடுகளில் 7,42,684 பேரும், நிறுவனங்களில் 1463 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம் புதிதாக இன்று ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...