மும்பையில் 93 காவலர்களுக்கு கரோனா
மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் 93 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் 93 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 9,657ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையை பொறுத்தவரை நேற்று 67,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் 20,181 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- செங்கல்பட்டில் ரௌடிகள் என்கவுண்டர் ஏன்? ஐ.ஜி. விளக்கம்
அவர்களில் 1,170 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,53,809ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு நேற்று மேலும் 4 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிகை 16,388ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனவிலிருந்து 2,837 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,55,563ஆக உயந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 35,594 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...