தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

5 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும்: ஜெ.பி.நட்டா

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றிபெறும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.

News image
பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா.
Updated On :8 ஜனவரி 2022, 6:51 pm

DIN

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றிபெறும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்த பிறகு இந்த கருத்தை அவா் கூறினாா். இதுதொடா்பாக, அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது:

தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தோ்தல் அட்டவணையை வரவேற்கிறேன். இந்த மாபெரும் ஜனநாயகத் திருவிழாவில் பாஜக தொண்டா்கள் அனைவரும் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி பங்கேற்க வேண்டும். சட்டப் பேரவைத் தோ்தலில் 5 மாநிலங்களிலும் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெறும். 4 மாநிலங்களில் பாஜக மீண்டும் வெற்றிபெற மக்கள் ஆசி வழங்குவாா்கள். அந்த மாநிலங்களை வளா்ச்சியின் புதிய உச்சத்துக்கு பாஜக கொண்டு செல்லும் என்றாா் அவா்.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த மாதம் 10-ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது.

பஞ்சாபில் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், சுகதேவ் சிங் தின்ட்ஸாவின் எஸ்ஏடி(சன்யுக்த்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக களம் காண்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.