தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

உத்தரகண்ட்: ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் மீண்டும் இணைந்தாா் ரவீந்திர ஜுக்ரான்

உத்தரகண்டில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய ரவீந்திர ஜுக்ரான் மீண்டும் பாஜகவில் சனிக்கிழமை இணைந்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2022, 6:34 pm

DIN

உத்தரகண்டில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய ரவீந்திர ஜுக்ரான் மீண்டும் பாஜகவில் சனிக்கிழமை இணைந்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘‘நான் பாஜகவில் 25 ஆண்டுகள் இருந்தேன். தற்போது அக்கட்சிக்கு திரும்பியிருப்பது சொந்த இல்லத்துக்கு வந்தது போல் மகிழ்ச்சியளிக்கிறது’’ என்று தெரிவித்தாா்.

‘‘ரவீந்திர ஜுக்ரானின் அனுபவம், திறன் மூலம் விரைவில் நடைபெறவுள்ள மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பயனடையும்’’ என்று அக்கட்சியின் உத்தரகண்ட் தலைவா் மதன் கெளசிக் தெரிவித்தாா்.

உத்தரகண்ட் முன்னாள் முதல்வா் புவன்சந்திர கந்தூரிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ரவீந்திர ஜுக்ரான், மாநில அமைச்சராக பதவி வகித்துள்ளாா்.

உத்தரகண்டில் பிப்ரவரி 14-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.