கோப்புப் படம்
கோப்புப் படம்

2 மாத குழந்தையைத் தண்ணீர் தொட்டியில் வீசிய குரங்கு

குழந்தையை பல இடங்களில் தேடிய பெற்றோர்கள் தண்ணீர்த் தொட்டியில் இறந்த நிலையில், உடலை கண்டெடுத்துள்ளனர்.
Published on


உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2 மாத குழந்தையை தூக்கிச் சென்ற குரங்குகள் தண்ணீர்த் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குழந்தையை பல இடங்களில் தேடிய பெற்றோர்கள் தண்ணீர்த் தொட்டியில் இறந்த நிலையில், குழந்தையின் உடலை கண்டெடுத்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பாட் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதி மொட்டை மாடியில் 2 மாதக் குழந்தையுடன் மூதாட்டி உறங்கியுள்ளார். 

அப்போது மாடிகளில் உலவிக்கொண்டிருந்த குரங்குகள் வீட்டின் கதவு திறந்திருந்ததால் வீட்டில் புகுந்து குழந்தையை தூக்கிச் சென்றுள்ளன. மூதாட்டியின் அஜாக்கிரதையால் நடந்தேரிய இந்த சம்பவத்தில், மொட்டை மாடிகளிலுள்ள தண்ணீர்த் தொட்டியில் குரங்குகள் குழந்தையை வீசிச்சென்றுள்ளன. 

உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டி கண்விழித்து குழந்தை காணாமல்போனதை அறிந்து குழந்தையின் பெற்றோர்களுடன் தேடியுள்ளார். பின்னர் தண்ணீர்த் தொட்டியில் குழந்தையின் உடலைக் கண்டெடுத்துள்ளனர். 

கடந்த சில நாள்களாகவே குரங்குகள் அடிக்கடி வீட்டினுள் நுழைந்து குழந்தையை தூக்க முயன்றதாக குழந்தையின் தாயார் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையை குரங்குகள் தூக்கிச்செல்லும்போது உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com