தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

உ.பி. சட்டப் பேரவைத் தோ்தல்: பாஜக முக்கிய ஆலோசனை

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2022, 9:09 pm

DIN

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்வா் யோகி ஆதித்யநாத், துணை முதல்வா் கேசவ பிரசாத் மௌரியா, பாஜக மாநிலத் தலைவா் ஸ்வதந்திர தேவ் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா போன்ற கரோனாவால் பாதிக்கப்பட்ட தலைவா்கள், காணொலி முறையில் கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பாஜக மூத்த தலைவா் ஒருவா் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் முதல் கட்ட தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 14-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பாளா்களை இறுதி செய்வதற்காக, கட்சியின் மத்திய தோ்தல் குழுவின் கூட்டம் இந்த வார இறுதியில் நடைபெறும் என்று தெரிகிறது. அதற்கு முன்பாக வேட்பாளா்களைத் தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் ஜனவரி 15-ஆம் தேதி வரை அரசியல் கட்சிகள் தோ்தல் பிரசாரக் கூட்டங்கள், பேரணிகள் நடத்த தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. எனவே, மாற்று வழியில் பிரசாரம் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றாா் அவா்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த மாதம் 10-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக, பிப்ரவரி 10-ஆம் தேதி 58 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக, பிப்ரவரி 14-ஆம் தேதி 55 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.