தில்லியில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும் விகிதம் 29.21%
தில்லியில் புதிதாக 28,867 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தில்லியில் புதிதாக 28,867 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் கிடைத்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 98,832 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 28,867 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 29.21 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 22,121 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 31 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,46,583 ஆக உயர்ந்துள்ளது. இதில், 15,27,152 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 25,271 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 94,160 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் 1,63,851 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதுவரை மொத்தம் 2,80,71,935 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...