வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வாகனத்தை நிறுத்துவதில் தகராறு; பெண்ணை சரமாரியாக தாக்கிய மருத்துவர்

மருத்துவரும் அவருடன் இருந்த ஆண்களும் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் அந்த பெண்ணை தாக்கி, வண்டியையும் கவிழ்த்ததாகக் கூறப்படுகிறது. 

News image
பெண்ணை தாக்கிய மருத்துவர்
Updated On :16 ஜனவரி 2022, 9:24 am

DIN

மத்தியப் பிரதேசம் இந்தூரில் 4, 5 ஆண்கள் சேர்ந்து பெண்ணைத் தாக்கும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் அப்பெண்ணைத் தாக்கும் நபர்களில் ஒருவர் மருத்துவர் என கூறப்படுகிறது. மருத்துவர் ஒருவர் பொது இடத்தில் இது போல நடந்துகொண்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இந்த மருத்துவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை மாலை பன்வர்குவான் பகுதியில் நடந்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவரும் அவருடன் இருந்த ஆண்களும் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் அந்த பெண்ணை தாக்கி, வண்டியையும் கவிழ்த்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த விடியோவில் கொடூரமாகத் தாக்கப்படும் இருவர் பன்வர்குவான் பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் துவாரகா பாய் மற்றும் அவரது மகன் ராஜு எனக் கூறப்படுகிறது. 

தங்கள் காய்கறி தள்ளுவண்டிக்கு முன்னால் நிறுத்தியிருந்த காரை நகர்த்துமாறு அந்த மருத்துவரிடம் அந்தப் பெண் கூறியுள்ளார். 

இந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த மருத்துவர், தனது கிளினிக்கிற்கு கால் செய்து ஊழியர்களை வர வைத்துள்ளார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து தாயையும் மகனையும் தாக்கியதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். மேலும், அவர்களின் தள்ளுவண்டியையே அப்படியே கவிழ்த்தும் போட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் தங்கள் வாழ்வாதாரத்தையும் முற்றிலுமாக இழந்த அவர்கள் கதறுவது அந்த விடியோவில் பதிவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.