இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் பெயர் நாளை(ஜன.18) அறிவிப்பு: அரவிந்த் கேஜரிவால்

பஞ்சாப் தேர்தலில் போட்டியிடவுள்ள ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பெயரை நாளை அறிவிக்கவுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :17 ஜனவரி 2022, 7:40 am

DIN

பஞ்சாப் தேர்தலில் போட்டியிடவுள்ள ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பெயரை நாளை அறிவிக்கவுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன.

இந்த தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், பாரதிய ஜனதா கூட்டணி என பலமுனைப் போட்டிகள் நிலவுகிறது.

அனைத்து கட்சிகளும் தங்களின் வெற்றிக்கான பிரசாரத்தை செய்து வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியானது தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தனது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து அதிரடி காட்டி வருகின்றது.

இந்நிலையில், ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பெயரை நாளை பிற்பகல் 12 மணிக்கு அறிவிக்கவுள்ளோம் என அரவிந்த கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.