மும்பை: கரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டுள்ள பாடகி லதா மங்கேஷ்கரின் (92) உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தார் வெளியிடிருக்கும் அறிக்கையில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நைட்டிங்கேல் என்று லதா மங்கேஷ்கரை அழைத்திருக்கும் அந்த அறிக்கையில், தொடர்ந்து அவர் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. வெள்ளையா, கருப்பா, ஒல்லியா, குண்டா இருக்கோம்னு கவலையா?
அந்த அறிகையில், லதா அம்மா தொடர்ந்து ப்ரீஸ் கேண்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் வைக்கப்படுவார். இன்று காலை பரீட்சார்த்த முறையில் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் நீக்கப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. எனினும், அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பிலேயே வைக்கப்பட வேண்டியது அவசியம். உங்களின் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துகளுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
லதா மங்கேஷ்கருக்கு ஜனவரி 11-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மும்பை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 04) - இன்று வெற்றி யாருக்கு?

லிவ் இன் முறையில் வாழ்பவா்களுக்கும் ஐபிசி பிரிவு 498ஏ பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

தொழில்நுட்பத்துக்கு கைமாறும் அதிகாரங்கள்
சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



